அதிமுக பொதுக்குழுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து ஆகியோர் தொடர்ந்து வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் நேரம் குறித்து நீதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை இரண்டு வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டு, வழக்கை மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தது உச்ச நீதிமன்றம். உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது ஓ பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து புதிய நீதிபதியாக இந்த வழக்கு விசாரணையை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 10 மற்றும் 11 தேதிகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு 11.30மணிக்கு வழங்கப்படும் என நீதிபதி ஜெயசந்திரன் தெரிவித்துள்ளார்.