அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகின்றது.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக தலைமையில் பிஜேபி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் அமைத்துள்ள அதிமுக தலைமையிலான கூட்டணியில் அதிமுக 20 , பாஜக 5 , பாமக 7 , தேமுதிக 4 , புதிய தமிழகம் 1 , புதிய நீதி கட்சி 1 , தமாக 1 , N,.R காங்கிரஸ் ( புதுச்சேரி ) தொகுதியிலும் போட்டியிடுவதாக தொகுதி பங்கீடு ஒப்பந்தமாகி , இறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள கிரவுண்ட் பிளாசா தனியார் ஹோட்டலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கூட்டணியில் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி பட்டியலை நேற்று காலை வெளியிட்டார்.
இதையடுத்து நேற்று இரவு அதிமுக பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலை வெளியாகியது.இதோடு சேர்த்து 18 சட்டமன்ற தேர்தல் தொகுதி வேட்பாளர் பட்டியலும் வெளியாகியது.இந்நிலையில் இன்று அதிமுக_வின் மாவட்ட செயலாளர் கூட்டம் அக்கட்சி தலைமையகத்தில் வைத்து அதிமுக_வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எட்டாப்படி பழனிசாமி பங்கேற்றுள்ளனர். இதில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பது குறித்த முக்கிய ஆலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் அதிமுக_வின் தேர்தல் அறிக்கை குறித்த பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிகப்படுகின்றது . ஏற்கனவே நேற்றும் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.