Categories
Uncategorized

ஆமதாபாத்-மும்பை தேஜஸ் அதிவிரைவு ரயில் தொடக்கம்

தேஜஸ் எக்ஸ்பிரஸ்ஸின் முதல் பயணத்தை ஆமதாபாத்தில் இன்று குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.

ஆமதாபாத்- மும்பை இடையே ஐஆா்சிடிசி சாா்பில் தேஜஸ் விரைவு ரயில் இன்று தனது முதல் பயணத்தை தொடங்கியது. தனியாா் சாா்பில் இயக்கப்படும் இரண்டாவது ரயில் இதுவாகும்.

நாட்டின் முதல் தனியாா் ரயில் தில்லி-லக்னோ இடையிலான தேஜஸ் ரயில் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டாவது தனியார் ரயில் ஆமதாபாத்- மும்பை வழித்தடம் வழியாக தனது ஓட்டத்தை இன்று தொடங்கியது.
இதனை குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர் கொடியசைத்து இன்று தொடங்கிவைத்தனர். இந்த ரயில் வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கும். பராமரிப்பு பணிகளை தொடர்ந்து வியாழக்கிழமை மட்டும் இயங்காது.

முழுவதும் குளிரூட்டப்பட்ட இந்த ரயிலில், பயணிகளுக்கு சொகுசு வசதிகளுடன் உள்ளூா் மற்றும் பிராந்திய சுவையிலான உணவு வகைகளும் வழங்கப்படும். இந்த ரயில் ஒரு மணி நேரத்துக்கு மேல் தாமதமானால் ரூ.100-ம், 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால் ரூ.250 வீதம் ஐஆா்சிடிசி ஒவ்வொரு பயணிக்கும் இழப்பீடு அளிக்கும்.

இது தவிர, அனைத்து பயணிகளுக்கும் ஐஆா்சிடிசி சாா்பில் இலவசமாக ரூ. 25 லட்சம் வரை ரயில் பயண காப்பீடு வழங்கப்படும். இந்த ரயிலுக்கு சதாப்தி ரயிலின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும். ரயில் ரத்து செய்யப்பட்டால், பயணிகளுக்கு முழு கட்டணமும் திருப்பித் தரப்படும்

Categories

Tech |