தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான நடிகையர் திலகம் படத்தில் நடித்ததில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது. அதன் பிறகு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான படங்கள் சூப்பர் ஹிட் ஆக தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். இவர் தற்போது தமிழில் மாமன்னன் மற்றும் சைரன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் சிறு பட்ஜெட் படங்களை தயாரிப்பதற்கு முடிவு செய்துள்ளதாகவும் அதற்காக கதை கேட்டு வருவதாகவும் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை மலையாள சினிமாவில் வெளியான வாஷி என்ற படத்தை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.