Categories
தேனி மாவட்ட செய்திகள்

சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம்… வீசிய பலத்த சூறைக்காற்று… வேதனையடைந்த விவசாயிகள்…!!

தேனி மாவட்டத்தில் வீசிய சூறைக்காற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சரிந்து விழுந்ததில் விவசாயிகள் பெரும் வேதனையடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் கூடலூர் பகுதிகளில் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் மூலம் திசுவாழைகளை சில வருடங்களாக அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது அப்பகுதியில் நடப்பட்டுள்ள வாழைமரங்கள் இன்னும் சில நாட்களில் சாகுபடி செய்யும் நிலையில் உள்ளது.

இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறை காற்று வீசியுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மரங்கள் சரிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது. இதனால் வாழை மரங்களில் சாகுபடி செய்யமுடியாமல் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.

Categories

Tech |