விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய போவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து முதல்வர் பழனிசாமி மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்த வருகிறார். இந்நிலையில் தமிழ்நாட்டில் விவசாயிகள் பயிர்க் கடன் அனைத்தும் தள்ளுபடி செய்வதாக முதல்வர் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். கொரோனா, நிவர் புயல் மற்றும் தொடர் கனமழை காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக தமிழகத்தில் 16.43 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள் மூலமாக பெற்ற 10 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த அரசாணை விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. முதலமைச்சரின் இந்த அறிவிப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்பு அளித்துள்ளனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திமுகவின் அறிவிப்பு மற்றும் வரும் தேர்தலை மனதில்கொண்டு எடப்பாடி அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தற்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்யப்படும் என்றும் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதனால் தமிழக அரசு கல்வி கடனையும் விரைவில் தள்ளுபடி செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.