அக்னி நட்சத்திரத்தால் நாகையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
கடந்த 4ஆம் தேதி தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளது. அன்று முதல் நாகையில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இந்த வெயிலால் மதிய வேளையில் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். மேலும் பகலில் வாட்டி வதைக்கும் இந்த வெயிலின் தாக்கமானது இரவிலும் தென்பட்டது.
இதற்கிடையில் புயல் காரணமாக 14, 20, 21 ஆகிய தேதிகளில் மட்டுமே நாகையில் மழை பெய்து சற்று குளிர்ச்சி நிலவியது. இந்நிலையில் நேற்று நாகையில் வெயில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்தது. இதனால் சாலைகளில் எங்கு பார்த்தாலும் கானல் நீராகவே தென்பட்டது. மேலும் வாட்டி வதைத்த அக்னி நட்சத்திர வெயில் நேற்றுடன் முடிவடைவதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.