அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டால் சுபகாரியங்கள் செய்யக் கூடாது என்ற கருத்து மக்கள் மத்தியில் வெகு காலமாக இருந்து வருகின்றது. அதிலும் வட இந்திய மக்கள் மத்தியில் அதிகமாகவே இந்த கருத்து இருந்து வருகிறது. கத்தரி தோஷம் என ஒன்று உள்ளது கத்திரி தோஷத்திற்கும் கத்திரி வெயிலிர்க்கும் வித்தியாசங்கள் இருக்கின்றது.
கத்தரி தோஷம் என்றால் என்ன? சுபநிகழ்ச்சி செய்ய லக்னம் குறிப்பது வழக்கம். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் குறிப்பிட்ட லக்னம் வரும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும் பொழுது லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் அல்லது 12ம் இடத்தில் ராகு கேது சனி செவ்வாய் என பாவகிரகங்கள் அமைந்து இருந்தால் அதற்குப் பெயர் கத்திரி தோஷம் என பெயர். இந்த காலத்தில் சுப காரியங்களை செய்யக்கூடாது
அக்னி நட்சத்திரம் என்பது ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 21ம் தேதிலிருந்து வைகாசி 15 வரை இருக்கும். அக்னி நட்சத்திர காலத்தில் சுபகாரியங்கள் செய்யக் கூடாது என எந்த சாஸ்திரங்களும் சொல்லவில்லை. எந்த பஞ்சாங்கத்தில்லும் சித்திரை 21ல் இருந்து வைகாசி 15 வரை சுபமுகூர்த்தங்கள் குறிக்கப்பட்டிருக்கும். சுபகாரியங்கள் செய்யக் கூடாது என்றால் பஞ்சாங்கத்தில் சுபகாரியங்களை குறிப்பிட்டிருக்க மாட்டார்கள்.
எனவே அக்னி நட்சத்திரத்தில் சுப காரியங்களை செய்யலாம். அதிலும் எந்தெந்த சுபகாரியங்களை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளது. கிணறு வெட்டுதல் ,தோட்டம் வைத்தல், விதை விதைத்தல் போன்றவை செய்யக்கூடாது .இதனை தவிர்த்து மற்ற சுப காரியங்களை செய்யலாம்.