சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், உத்திரபிரதேசத்தில், பிரச்சாரம் நடத்தியுள்ளார்.
உத்திரபிரதேச மாநிலத்தில் வரும் 10-ம் தேதியிலிருந்து முதற்கட்ட தேர்தல் நடக்கவுள்ளது. இதில் அலிகார் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் பிரச்சாரம் செய்திருக்கிறார். அப்போது அவர் தெரிவித்ததாவது, டெல்லிக்கு எங்களை அனுப்பி வையுங்கள். பிரச்சினைகள் முழுவதும் தீர்ந்து விடும்.
சாதியை அடிப்படையாக வைத்து கணக்கெடுப்பது குறித்து பேசுவோம். பா.ஜ.க விற்கான கதவை மக்கள் அடைத்து விட்டார்கள். மாவ் பகுதியில் நடந்த என் முதல் கூட்டத்தில், லக்னோவில் இருக்கும் பாஜகவின் தலைமையகம் மற்றும் மற்ற அலுவலகங்கள் அடைக்கப்படும் என்று உறுதிப்படுத்தியது போல் அடைக்கப்படும். அலிகார் மக்கள் அதற்கு பூட்டு போட்டு விடுவார்கள் என்று கூறியிருக்கிறார்.