லிபியாவில் அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற படகு திடீரென விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 27 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்கள்.
வட ஆப்பிரிக்க நாடாக லிபியா உள்ளது. இந்த லிபிய நாட்டின் மேற்கு பகுதியில் அல் அவுஸ் என்னும் கடற்கரை நகரம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நகருக்கு அருகே அகதிகளை ஏற்றுக் கொண்டு சென்ற படகு ஒன்று திடீரென நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி படகிலிருந்த அகதிகளில் 27 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்கள். மேலும் மேல் குறிப்பிட்டுள்ள விபத்தில் சிக்கி பலரும் மாயமானதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.