Categories
உலக செய்திகள்

இந்தியாவின் கலாச்சாரத்தை பின்பற்றுவதா…? யோகாவை எதிர்க்கும் பாகிஸ்தான் மதவாதிகள்…!!!

பாகிஸ்தான் அரசின் யோகா பற்றிய பதிவிற்கு அந்நாட்டின் மதவாதிகளிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சர்வதேச யோகா தினத்திற்காக பல உலக நாடுகள் யோகா பயிற்சிகளை மேற்கொண்டன. அதேபோல் பாகிஸ்தானும் தங்களது ட்விட்டர் பக்கத்தில், “யோகா மூலம் மன நிறைவு, நிலையான மாற்றம் உண்டாகிறது. இரு விஷயங்கள் உடற்பயிற்சி உலகத்தில் மிகவும் முக்கியமானது.

அதன்படி யோகா மூலமாக மனது, உடல் புத்துணர்வு பெறுகிறது” என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், பாகிஸ்தான் அரசாங்கத்தின் இந்த கருத்திற்கு அந்நாட்டின் மதவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள், இந்திய நாட்டின் கலாச்சாரத்தை ஆதரிக்கும் யோகாவை பாகிஸ்தான் ஊக்குவிக்கக்கூடாது.

அதனை தடுக்க வேண்டும். இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் வழியை பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் கடைபிடிக்கிறார். அவரின் அடிமையா நீங்கள்? என்று பதிவிட்டு வருகிறார்கள்.

Categories

Tech |