தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணியை மும்முரமாக செய்து வருகின்றனர். மேலும் திமுகவினரும், அதிமுகவினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர் .மேலும் ஒரு கட்சியில் கூட்டணி குறித்த குழப்பமும் நீடித்து வருகிறது. வேட்பாளர்கள் அந்தந்த கட்சிகளில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இன்று அதிமுக வேட்பாளர்களுக்கு நேர்காணல் நடைபெற்று வருகிறது.
மேலும் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமியை எதிர்த்து போட்டியிட்ட திமுக சார்பாக 25 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவர்களில் சரியான வேட்பாளரை தேர்வு செய்வதில் திமுக மும்முரம் காட்டி வருகிறது. எடப்பாடி தொகுதியானது வன்னியர் சமூக மக்கள் அதிகமாக வசித்து வருவதன் காரணமாக வன்னியர் அறக்கட்டளையை சேர்ந்த சிவலிங்கம் என்பவர் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.