நடிகர் யோகி பாபு மீண்டும் ஒரு பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக நடித்து வருகின்றார் யோகி பாபு. நடிகர் பிரபாஸ் தற்போது மாருதி இயக்கத்தில் உருவாகும் புதிய பான் இந்தியா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார். இந்த திரைப்படத்தின் படபிடிப்பானது ஹைதராபாத்தில் நடந்து வருகின்றது.
இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்கின்றார். இந்த நிலையில் இப்படத்தில் நடிகர் யோகி பாபு பங்கேற்க இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. ஏற்கனவே ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கும் ஜவான் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் யோகி பாபு நடித்ததைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார்.