Categories
உலக செய்திகள்

திரும்பி அடிக்கும் கொரோனா… ”மீண்டும் தாக்கம் அதிகரிப்பு”…. சீனாவுக்கு அபாயம் …!!

சீனா கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த நிலையில் சீனாவின் வடகிழக்கு பகுதிகளில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது

சீனாவில் அதிக அளவு கொரோனா பரவிய இடம் வூஹான். பின்னர் பல கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் ரஷ்யாவில் இருக்கும் சீனர்கள் வெளியேற்றப்பட்டதால் தாய்நாடான சீனாவிற்கு திரும்பிய அவர்களின் மூலம் கொரோனா பாதிப்பு மீண்டும் சீனாவில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 46 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு 1500 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்னும் தகவல் வெளியாகியுள்ளது.  அதிலும் சீன ரஷ்ய எல்லையான சூஃபென்ஹே பகுதிகளில்  கொரோனா தொற்று அதிக அளவில் ஏற்பட்டு அடுத்த வூஹானாக மாறி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர் மருத்துவ நிபுணர்கள். இந்நிலையில் பாதிக்கப்பட்ட 46 பேரில் 10 பேரை தவிர மீதம் உள்ளவர்கள் வெளிநாட்டில் இருந்து தாய்நாடான சீனாவிற்கு திரும்பியவர்கள் எனவும் தெரிவித்துள்ளது தேசிய சுகாதார குழு.

 

Categories

Tech |