Categories
உலக செய்திகள்

சீனாவை ”களமாடும் கொரோனா” புது மாகாணத்தில் பரவல் – அதிர்ச்சி

மீண்டும் சீன மாகாணத்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்

சீனாவில் மீண்டும் கொரோனா பரவ தொடங்கியதால் இது இரண்டாவது கொரோனா அலையாக இருக்கக்கூடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது, ஜியா பகுதியில் இருக்கும் மக்கள் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் இடையே இந்தக் கொரோனா தொற்று பரவியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் இவ்வாறு தொற்று பரவ தொடங்கியதன் காரணமாக பயணம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.வீட்டிலிருந்து வெளியே வருபவர்கள் மாஸ்க் அணிய வலியுறுத்துவதும் உடலின் வெப்பநிலையை பரிசோதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் பல்பொருள் அங்காடிகளை தவிர ஜியா பகுதியில் வேறு எந்த தொழில்களும் இயங்கவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

சீனாவின் சமூக ஊடகம் ஒன்று மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர் அதில் அவர்கள் எல்லாமே மூடப்பட்டுள்ளது, மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர், யாராலும் நகருக்குள் போக முடியாது போனால் அவ்வளவுதான் திரும்ப வர முடியாது என கூறியுள்ளனர். ஒருவர் அரசின் நடவடிக்கையினால் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக பலரும் எண்ணுகின்றனர் ஆனால் அது உண்மையில்லை என்று கூறியுள்ளார்.

Categories

Tech |