திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் இருக்கின்ற நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களுடைய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதையடுத்து ஆளும் கட்சியினரும், எதிர் கட்சியினரும் தங்கள் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒருவரை ஒருவர் பழி கூறி வருகின்றனர். இதையடுத்து தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014ஆம் வருடம் அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்ற பிறகு மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அவருடைய மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன இதையடுத்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படது. ஆனால் ஆணையத்தின் விசாரணை முடியவில்லை. மேலும் இந்த விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் “ஜெயலலிதா மரணத்திற்கு நான் மட்டுமே நீதி கேட்டு வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப் படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.