Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மே 3ம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு நீட்டிப்பா?…. மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை தொடங்கியது!

மே 3ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது பற்றி பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலியில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,892ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 872ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள மத்திய, மாநில அரசுகள் நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கொரோனோவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் 14ம் தேதி வரை முதற்கட்டமாக நீட்டிக்கபட்ட ஊரடங்கு மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மீண்டும் ஊரடங்கை வரும் மே 3ம் தேதி வரை நீட்டித்துள்ளார். இதையடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸ் 3ம் கட்ட சமூக பரவலுக்கு செல்வது பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எனினும் நாளுக்குள் நாள் பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலியில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்புப்பணிகள், மே 3ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது ஆகியவை பற்றி முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்கு பின்னர் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |