Categories
சினிமா தமிழ் சினிமா

“6 வருடங்களுக்குப் பிறகு” மீண்டும் இணையும் பிரபல ஜோடி….. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!

பிரபல மலையாள நடிகர் பகத் பாஸில். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா மற்றும் விக்ரம் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவரின் நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலக்கி வரும் பகத் பாஸில் தற்போது கன்னட சினிமாவிலும் கால் பதிக்கிறார். இவர் நடிக்கும் படத்தை பிரபல கன்னட இயக்குனர் பவன் குமார் இயக்குகிறார். இந்த படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை அபர்ணா பால முரளி நடிக்கிறார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் மகேஷிண்டே பிரதிகாரம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் மூலம் தான் அபர்ணா பால முரளி ஹீரோயின் ஆக அறிமுகமானார். இந்த படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 6 வருடங்களாகும் நிலையில், மீண்டும் பகத் பாஸில் மற்றும் அபர்ணா பால முரளி ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த தகவலால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும் பகத் பாஸில் மற்றும் அபர்ணா பால முரளி நடிக்கும் படத்தின் சூட்டிங் அக்டோபர் 9-ம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கிறது.

Categories

Tech |