கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே விமான சேவை தொடங்கப்படும் என விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி விளக்கம் அளித்துள்ளார். மக்களுக்கு ஆபத்து ஏற்படாது என்ற நம்பிக்கை ஏற்படும் சமயத்தில் விமான சேவை தொடங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், விமான நிறுவனங்களுக்கு உரிய அறிவிப்பு, போதுமான நேரம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை 2ம் கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு 27வது நாளாக அமலில் உள்ள நிலையில், மே 4ம் தேதியில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என ஏர்- இந்தியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் நிறுவனம் தெரிவித்தது.
ஜூன் மாதத்தில் இருந்து வெளிநாட்டு விமான சேவை தொடங்கு எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதேபோல ரயில் சேவையும் தொடங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, மாரு அறிவிப்பு வரும் வரை ரயில் சேவை தொடங்காது என அறிவிப்பு வெளியானது. இன்று கடந்த 24 மணி நேரத்தில் 1,553 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து இந்தியாவில் கொரோனா பாதித்த மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பாதிப்புகள் 17,265 ஆக அதிகரித்துள்ளது. அதில், இதுவரை 543 பேர் உயிரிழந்துள்ளனர். 2,302 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே விமான சேவை தொடங்கும் என மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி விளக்கம் அளித்துள்ளார்.