Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனாவிலிருந்து மீண்ட கோவை ஆட்சியர்..!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி குணமடைந்து வீடு திரும்பினார்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

இருப்பினும் டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி, தன்னைத்தானே வீட்டில் 5 நாட்கள் வரை அவர் தனிமைப்படுத்திக் கொள்கிறார்.. அதன் பின்னர் வழக்கம்போல் தன்னுடைய பணியை அவர் மேற்கொள்வார் என்று அரசு அலுவலர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கொரோனா சிகிச்சை முடிந்து, பூரண குணமடைந்து வீடு திரும்பிய ஆட்சியருக்கு  அரசு அலுவலர்கள், ஊடக நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Categories

Tech |