முன்னணி நடிகர்கள் சிம்பு மற்றும் சந்தானம் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
திரைப்படங்களில் நடிகரர், நடிகைகளின் காமினேஷனை எந்தளவிற்கு ரசிகர்கள் விரும்புகிறார்களோ அதே அளவிற்கு காமெடியர் மற்றும் நடிகரின் கூட்டணியையும் ரசிகர்கள் வெகுவாக விரும்புகின்றனர். அந்த வகையில் சிம்பு மற்றும் சந்தானத்தின் கூட்டணி ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பு பெற்றது.
ஆனால் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்ததிலிருந்து வேறு கதாநாயகர்களுடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வில்லை. இந்நிலையில் நடிகர் சிம்புவும், சந்தானமும் இணைந்து நடிக்க உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் இயக்குனர் புகழ் கோகுல் இயக்கும் “கொரோனா குமார்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிக்க உள்ளனர். முழுக்க முழுக்க காமெடி என்டர்டைன்மென்ட் கலந்த இப்படத்திற்காக ரசிகர்கள் வெகுவாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.