Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணமாகி 8 வருடங்களுக்கு பிறகு…. போட்டோவுடன் குட் நியூஸ் சொன்ன இயக்குனர் அட்லி…. குவியும் வாழ்த்து…!!!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் அட்லி. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தொடர் வெற்றி படங்களை கொடுத்தார். இவர் தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு அட்லி பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து  8 வருடங்களாகும் நிலையில் பிரியா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்லையில் இயக்குனர் அட்லி தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து தந்தையாக போவதை அறிவித்துள்ளார். மேலும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இயக்குனர் அட்லி மற்றும் பிரியாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Priya Mohan (@priyaatlee)

 

Categories

Tech |