Categories
உலக செய்திகள்

“நள்ளிரவில் என் குடும்பத்தினர் கதறி அழுதார்கள்!”.. என் சகோதரரை கொன்றுவிட்டார்கள்.. இந்தியாவில் இருக்கும் ஆப்கான் மருத்துவர் வேதனை..!!

இந்தியாவில் வாழ்ந்து வரும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த நபர், தன் சகோதரரை தலிபான்கள் சுட்டுக்கொன்றதாக வேதனையுடன் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மருத்துவரான ஏ.எஸ் பாரக், கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு இந்தியாவிற்கு வந்திருக்கிறார். எனினும் அவரின் குடும்பத்தினர் அனைவரும் காபூலில் தான் இருக்கிறார்கள். இந்நிலையில் டெல்லியில் இருக்கும், UNHCR அலுவலகத்தில் முன் ஆப்கானிஸ்தான் நாட்டினர் கடந்த 8 தினங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியிருப்பதால், இந்தியாவில் இருக்கும் எங்களுக்கு அகதி அந்தஸ்து மற்றும் மீள்குடியேற்றம் தரவேண்டும் என்று கோரி போராட்டம் நடத்துகிறார்கள். இதில் Dr. பாரக்கும் பங்கேற்றார். அப்போது பத்திரிகையாளர்களிடம் தன் சகோதரருக்கு நேர்ந்த கொடுமை பற்றி பேசியிருக்கிறார்.

பாரக் தெரிவித்துள்ளதாவது, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவில் காபூலில் இருக்கும் என் குடும்பத்து பெண்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள். அங்கிருக்கும் எங்கள் வீட்டிற்கு தலிபான்கள் சென்று, என் சகோதரரை பற்றி கேட்டிருக்கிறார்கள். அதன் பின்பு வேறு அறையில் இருந்த என் சகோதரரை வெளியே இழுத்துச்சென்று, ஆறு முறை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டார்கள். இந்த தகவலை கேட்டவுடன், கடும் அதிர்ச்சிக்குள்ளானேன்.

தலைசுற்றி மயங்கி விழுந்துவிட்டேன். என் சகோதரர், அமெரிக்க இராணுவத்திற்காக பணியாற்றியதால், தலிபான்கள் வீடு தேடி சென்று கொலை செய்துள்ளனர். என் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் நள்ளிரவில் போன் செய்து கதறி அழுதார்கள். இறந்த என் சகோதரருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களின் கண்முன்பே என் சகோதரனை கொடூரமாக கொன்று விட்டனர் என்று வேதனையுடன் கூறியிருக்கிறார்.

Categories

Tech |