Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை…. பஞ்சத்தால் வாடும் மக்கள்…. தகவல் வெளியிட்ட பிலிப்போ கிராண்டி….!!

ஆப்கானிஸ்தானில் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் அங்கு மோசமான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை ஐநா சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையர் பிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதில் “ஆப்கானிஸ்தானில் நடந்த உள்நாட்டுப் போரினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

UNHCR - Solutions needed to stem global refugee crisis, says Grandi

இதனால் வருகின்ற குளிர்காலத்தில் 38 மில்லியன் மக்கள் தொகையில் பாதிக்கும் மேலானோர் பட்டினியால் வாடும் அவலநிலை உருவாகும். அதிலும் ஆப்கானிஸ்தான்  நாடானது தற்பொழுது அவசரமான பொருளாதார உதவியை எதிர்நோக்கியுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |