ஆப்கானியர்களுக்கு குளிர்காலத்திற்கு தேவையான பொருட்களை சீனா வழங்கியுள்ளது.
இந்தியாவிலிருந்து ஏற்கனவே ஆப்கானிற்கு 5,00,000 தடுப்பூசிகள் மற்றும் அவசர மருந்துப்பொருட்கள் வழங்கப்பட்டன. இதற்காக இந்தியாவிற்கு ஆப்கானிஸ்தான் அரசு நன்றியையும் தெரிவித்தது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு குளிர் காலத்திற்கு தேவையான பொருள்களை மனிதாபிமான அடிப்படையில் சீனா வழங்கியுள்ளது.
அதன் அடிப்படையில் 70,000 போர்வைகள் மற்றும் 40,000 கோட்டுகளை சீனா அளித்துள்ளது. இது குறித்து ஆப்கானிஸ்தான் நாட்டின் அகதிகள் மற்றும் மறுவாழ்வுத்துறை இணை அமைச்சரான Arcelo Carotti கூறியதாவது “சீனாவிலிருந்து வழங்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் அடுத்த பத்து நாட்களுக்குள் ஏழை எளியவர்களுக்கு வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.