Categories
உலக செய்திகள்

ஆப்கானிலிருந்து வெளியேறும் மக்கள்…. சுவிட்சர்லாந்தில் தஞ்சம்…. தகவல் வெளியிட்ட SP தேசிய கவுன்சிலர்….!!

ஆப்கானிலிருந்து வரும் அகதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என SP தேசிய கவுன்சிலர் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா படைகள் வெளியேறுதை அடுத்து தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்தது. இதனை அடுத்து தலீபான்களால் நாட்டின் முழு அதிகாரமும் கைப்பற்றப்பட்டது. மேலும் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் மறுபடியும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வானது உலக அளவில் பெரும் வீழ்ச்சியாகவே கருதப்படுகிறது. மேலும் 2001ல் அமெரிக்காவின் பொறுப்பற்ற வெளிநடப்பு நடந்தது. அதே போன்று தற்பொழுதும் அமெரிக்கா படைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று SP தேசிய கவுன்சிலரான ஃபேபியன் மோலினா கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதில் “உலகலாவிய சட்டத்தின்படி தலீபான்களின் ஆட்சி முறையானது மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான பேரழிவாகும். தற்பொழுது ஆப்கான் மக்களுக்கு சுவிட்சர்லாந்து உட்பட பல்வேறு நாடுகளின் ஆதரவு தேவை. இதனால் அங்குள்ள 10,000 அகதிகளை ஏற்றுக் கொள்வது போன்று சுவிட்சர்லாந்தில் இருக்கும் புலம் பெயர்ந்தவர்களின் குடும்பங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இது மட்டுமின்றி ஆப்கானிஸ்தானில் முடிந்தவரை வன்முறை சம்பவங்களை தடுத்து நிறுத்த சுவிட்சர்லாந்து அரசு உதவி செய்ய வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்

Categories

Tech |