Categories
உலக செய்திகள்

வெளியேறும் பிரான்ஸ் நாட்டினர்…. அனுப்பப்பட்ட போர் விமானங்கள்…. தகவல் வெளியிட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர்….!!

ஆப்கானிஸ்தனில் உள்ள பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் பிடியில் சிக்கியுள்ளது. இதனையடுத்து அந்நாட்டில் பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் ஆப்கானில் உள்ள பல்வேறு நாடுகளைச் சார்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் பிரான்ஸ் அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிளாரன்ஸ் பார்லி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் “ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் இருக்கும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் மட்டுமின்றி தங்கள் நாட்டின் பாதுகாப்பில் இருப்பவர்களும் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

மேலும் இதில் தூதரக அதிகாரிகளும் உள்ளடங்குவர். அதிலும் பிரான்ஸ் நாட்டுக்கு உதவி புரிந்த ஆப்கானைச் சேர்ந்த குடிமக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், செய்தியாளர்கள், பல்வேறு கலைஞர்கள் போன்றோரையும் மீட்க உள்ளோம்” என்று கூறியுள்ளார். இதற்காக இரண்டு போர் விமானங்களை பிரான்ஸ் அரசு ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது.

Categories

Tech |