Categories
கிரிக்கெட் விளையாட்டு

AGF VS BAN முதல் டி20 போட்டி :ஆப்கானை வீழ்த்தியது வங்காளதேசம் …. 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ….!!!

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது.

வங்காளதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி தாக்கவில் இன்று நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது.இதில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 60 ரன்கள் குவித்தார்.ஆஃப்கானிஸ்தான் அணி சார்பில் ஃபருக்கி, அஸ்மதுல்லா ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.இதையடுத்து 156 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.

ஆனால் வங்காளதேச அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆப்கானிஸ்தான் அணி தடுமாறியது.இதில் ஓரளவு தாக்குப் பிடித்த நஜிபுல்லா ஸத்ரான் 27 ரன்கள் எடுத்தார். ஆனால் மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியாக 17.4 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணி தரப்பில் நசும் அஹ்மத் 4 விக்கெட்டும், சொரிஃபுல் ஹசன் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.இதன்மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது.

 

Categories

Tech |