விஜயகாந்த் வீட்டில் அமைச்சர்கள் மற்றும் பாமக நிறுவனர் அன்புமணி ஆலோசனை நடத்தினர்.
சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாமக நிறுவனர் ராமதாஸ் , இளைஞரணி செயலாளர் அன்புமணி , அமைச்சர் தங்கமணி மற்றும் வேலுமணி வருகை தந்து விஜயகாந்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது . ஏனென்றால் வட மாவட்டங்களில் உள்ள கள்ளக்குறிச்சி , கிருஷ்ணகிரி தொகுதியானது பாமகவின் வாக்கு சதவீதம் அதிகமாக இருக்கிறது . இந்த தொகுதியை தேமுதிக கேட்பதாக சொல்லப்படுகிறது . இந்த தொகுதிக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரு வேறு இடையே இழுபறி நீடித்து வந்த நிலையில் தற்போது இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகின்றது.
தேமுதிக கட்சி தொடங்கி உடன் வட மாவட்டங்களில் உள்ள பாமகவின் வாக்கு சதவீதம் சரித்தது இதனிடையே பாமக தேமுதிக இடையே கடந்த காலங்களில் மோதல்கள் இருந்து வந்தது . கடந்த 2014ஆம் ஆண்டு கூட பாமக , தேமுதிக ஒரே கூட்டணியில் இருந்தாலும் இருவரும் சந்தித்துப் பேசவில்லை . தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக தேமுதிக இடையே கூட்டணி சேர்வதற்கு முன்பாகவே பல்வேறு இழுபறி நீடித்து வந்தது . ஏனென்றால் பாமக 7 தொகுதிகள் ஒதுக்கப் பட்டிருந்தது தேமுதிகவிற்கு 4 தொகுதியில்தான் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பாமகவும் தேமுதிகவும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் வெற்றி வாய்ப்பை எட்டமுடியும் . இந்நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தை முடிந்து செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரிக்கவே வந்ததாக கூறினார்.