Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாகசம்னா இப்படித்தான் இருக்கணும்… வெற்றி கொண்டாட்டம்… அசத்திய அதிவேக விமானங்கள்…!!

பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்ற பொன் விழாவை கொண்டாடும் வகையில் ராமேஸ்வரத்தில் அதிவேக விமானங்கள் வானில் பறந்து சாகசம் செய்துள்ளன.

இந்திய கடற்படை விமான தளமானது ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உச்சிப்புளியில் செயல்பட்டு வருகின்றது. இங்குள்ள ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் மற்றும்  ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி முழுவதும் இந்த விமான தளத்தில் இருந்து தினமும் இரண்டு ஹெலிகாப்டர்கள் சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் உச்சிப்புளியில் உள்ள கடற்படை விமான தளத்தில் இருந்து 10 அதிவேக விமானங்கள் 1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்ற பொன் விழாவைக் கொண்டாடுவதற்காக வானில் அணிவகுத்து பறந்துள்ளன.

இந்த விமானங்கள் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் கடல் பகுதியில் வானில் பறந்து சாகசம் செய்ததை ஏராளமான மக்கள் கண்டு களித்தனர். அதன்பிறகு இந்த 10 விமானங்களும் அதிவேகத்தில் அணிவகுத்த படி மீண்டும் கடற்படை விமான தளத்திற்கு வந்து சேர்ந்தன. இதுகுறித்து விமானப்படை அதிகாரி கூறும்போது, 10 அதிவேக விமானங்கள் இந்திய விமானப்படையின் வெற்றியை கொண்டாடும் விதமாக சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |