Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து தற்கொலை முயற்சி… பதற வைத்த வாலிபர்… அரியலூரில் பரபரப்பு…!!

காதல் விரக்தினால் வாலிபர் இரண்டாவது முறையாக தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள காரைக்குறிச்சி பகுதியில் 26 வயதுடைய வீரமணிகண்டன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவரும் உடையார்பாளையம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளனர். ஆனால் இரு வீட்டாரின் பெற்றோர்கள் இவர்களின் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீரமணிகண்டன் காதலித்து வந்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த வீரமணிகண்டன் அப்பகுதியில் அமைந்துள்ள தண்ணீர் தொட்டியின் மீது ஏறி சென்று தன்னையும் அந்தப் பெண்ணையும் சேர்த்து வைக்குமாறு கூறி கைகளில் கத்தியால்  கிழித்துக்கொண்டு சத்தம் போட்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து தப்பி சென்ற வீரமணிகண்டன் அப்பகுதியில் அமைந்துள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறி ஏறிச் சென்று தனது காலில் பிளேடால் கிழித்துக் கொண்டு சத்தம் போட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீர மணிகண்டனின் செல்போனுக்கு  தொடர்பு கொண்டு அவரிடம் பேச முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதற்கு வீரமணிகண்டன் போனை எடுக்காமல் இருந்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் விமல் மற்றும் முத்து ஆகிய இரண்டு வாலிபர்களும் செல்போன் கோபுரத்தின் மீது ஏறிச்சென்று வீர மணிகண்டனிடம்  பேசி கீழே இறங்கி வருமாறு அழைத்துள்ளனர்.

ஆனால் அதற்கும் வீரமணிகண்டன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் காவல்துறையினர் அந்த செல்போன் கோபுரத்தின் மீது ஏறிய சென்ற 2 வாலிபர்களின் செல்போனுக்கு தொடர்புக்கொண்டு வீரமணிகண்டனிடம் பேசினார்கள். அப்போது வீரமணிகண்டன் காவல்துறையினரிடம் தனது காதலியை இங்கு அழைத்து வர வேண்டும் எனவும் அவ்வாறு அழைத்து வரும் வரையில் நான் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்க மாட்டேன் என்று மிரட்டியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு உபரணங்களுடன் அங்கு விரைந்து சென்று செல்போன் கோபுரத்தின் மீது ஏறியுள்ளனர். அங்கு நின்றிருந்த வீர மணிகண்டன் அவர்களுடன் செல்ல மறுப்பு தெரிவித்து தகராறு செய்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ராஜேஷ் என்ற வாலிபர் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி சென்று வீரமணிகண்டனை கட்டியணைத்து இருக்கமாக பிடித்துக் கொண்டார். அதன்பிறகு தீயணைப்பு வீரர்கள் வீரமணிகண்டனின் இடுப்பை கயிற்றினால் கட்டிய பிறகு ராஜேஷ் வீரமணிகண்டனை தனது தோளின் மீது தூக்கி கொண்டு செல்போன் கோபுரத்தில் இருந்த கீழே இறங்கி சென்றார். இதனையடுத்து கீழே சென்ற வீரமணிகண்டன் திடீரென மயக்கம் அடைந்து விட்டார்.  இதனால் அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |