Categories
அரசியல் மாநில செய்திகள்

“அவைத் தலைவர் பதவி”…. செங்கோட்டையன் போட்ட ரகசிய மீட்டிங்…. அடுத்து நடக்கப்போவது என்ன?….!!!

ஈரோட்டில் தனது ஆதரவாளர்களை அழைத்து செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருடத்திற்கு இருமுறை அதிமுக.வின் செயற்குழு கூடியாக வேண்டும் என்ற நிலையில் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி இந்த ஆண்டுக்கான 2-வது கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது அதிமுக அவைத் தலைவராக பதவியில் இருந்த மதுசூதனன் இறப்பை அடுத்து ஓபிஎஸ் தரப்பிலிருந்து ஏற்கனவே முன்மொழியப்பட்ட தமிழ் மகன் உசேன் தற்காலிக அவைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் ஓபிஎஸ்ஸை சமாளித்ததோடு, அன்வர் ராஜா நீக்கத்தின் காரணமாக அதிருப்தியில் இருக்கும் சிறுபான்மையினரையும் சமாளிக்கலாம் என எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டம் போட்டுள்ளது.

ஆனால் இந்த நியமனம் செங்கோட்டையனுக்கு கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறுகிறார்கள். இதனிடையில் கொங்கு மண்டல அதிமுக வட்டாரத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரைவிடமும் கட்சியில் சீனியர் ஆகவும் அவர்களுக்கு முன்பாக கட்சியிலும், ஆட்சியிலும் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை அலங்கரித்தவர் செங்கோட்டையன் ஆவார். கொங்கு மண்டலம் தான் தற்போது அதிமுகவின் பெரிய அடித்தளமாக இருக்கிறது என்றால் ஆரம்ப காலத்தில் அதன் முகமாக இருந்தவர்களில் செங்கோட்டையனும் ஒருவராவார்.

ஆகவே தனக்கு அவைத் தலைவர் பதவி வேண்டும் என்று செங்கோட்டையன் செயல்பட்டு வரும்  நிலையில் அதற்கு பலன் இல்லை என்பதால் அதிருப்தியில் இருக்கிறாராம். இந்த நிலையில் கட்சியில் தனது நிலைப்பாடு தொடர்பாக முடிவெடுக்க செங்கோட்டையன் ஈரோட்டில் தனது ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையில் அதிமுக பொதுக்குழு நடைபெற்று முடியும் முன் செங்கோட்டையன் போன்று பலரும் அவர்களுடைய ஆதரவாளர்களை அழைத்து தங்களின் நிலைப்பாடு தொடர்பாக ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |