சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 6 சிறுவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலமான தார்வாட் மாவட்டத்தில் 15 வயது சிறுமியை, 6 சிறுவர்கள் பாலியல் கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டின் பேரில் 6 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து சிறுவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் கூறியபோது ” சிறுவர்கள் 6 பேரும் அந்த சிறுமியை பல்வேறு இடங்களில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். மேலும் இந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவிக்ககூடாது எனவும் அந்த சிறுமியை அவர்கள் மிரட்டியுள்ளனர். தற்போது சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது உறுதிசெய்யப்பட்டுள்ளது” என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.