Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK திட்டம் எரிச்சலா இருக்குது.. நீ தானே செய்யணும்… செம கடுப்பான எடப்பாடி …!!

அண்ணாவின் 114ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, நீங்கள் புதிதாக திட்டம் போடவில்லை என்றாலும் பரவாயில்லை, புது திட்டம் கொண்டு வரவில்லை என்றாலும் பரவாயில்லை, ஏற்கனவே அண்ணா திமுக அரசாங்கம் கொண்டு வந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு, பணிகள் எல்லாம் நிறைவு பெற்று இருப்பதையாவது திறந்து வையுங்கள், அந்த பணியாவது ஒழுங்காக செய்யுங்கள்.

இன்னும் ஒன்று சொன்னார், வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர். திரு ஸ்டாலின் சொன்னார் வெள்ளை அறிக்கை, வெள்ளை அறிக்கை என்று, சரி விடு.. அண்ணா திமுக ஆட்சியில் நடைபெற்ற பணிகள் குறித்து வெள்ள அறிக்கை கொடுங்கள், அண்ணா திமுக 1703 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது என்றார், ஆமா.. அறிவிப்பு கொடுத்தோம்.

அம்மா 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் அறிவித்தார்கள், நான் முதலமைச்சராக இருக்கும் போது 110 விதிகளில் அறிவித்தேன், பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் 500க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டேன், இல்லை என்று சொல்லவில்லைவே. புத்தகத்தில் பார்த்தேன், கொடுக்கப்பட்ட வேலை, நிறைவேற்றப்பட்ட பணி, எஞ்சிய பணி இதில் என்ன தப்பு இருக்கிறது ?

கேட்குறாரு நீங்கள் எல்லாம் விட்டுட்டு போய் விட்டீர்கள், நாங்கள் தான் செய்யணும் என்று சொல்கிறார், ஆமா.. நீ தான் செய்யணும். அரசாங்கத்தை உங்களிடம் தானே கொடுத்தார்கள், ஆட்சியில் யார் இருக்கிறார்களோ அவர்கள் தானே செய்ய வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்திருந்தால் நாங்கள் கொண்டுவந்த திட்டத்தை நிறைவேற்றி இருப்போம், ஆனால் நாம் கொண்டு வந்த திட்டம் எரிச்சலாக இருக்கிறது என தெரிவித்தார்.

Categories

Tech |