செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக விவகாரத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் மாறி மாறி வெற்றியை கொண்டாடுவது, அது அவர்களுடைய வெற்றி, அவர்கள் கொண்டாடுகிறார்கள்.எனக்கும் கூட இனிப்பு கொடுத்தால் நான் வாங்கி, சாப்பிட்டுட்டு போவேன், அதற்கு ஒன்றும் இல்லை.
நாட்டுக்கும் மக்களுக்கும் பிரச்சனையானதை நீங்கள் இவ்வளவு நேரம் கேட்டீர்கள் நான் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன், மக்களுக்கு பிரச்சனையானதை சொல்லுங்கள்.அது அவர்களுடைய கட்சி பிரச்சனை, நாட்டு பிரச்சனை கிடையாது, அது மக்களுக்கான பிரச்சனையும் கிடையாது. அது அவர்கள் பஞ்சாயத்து. பெரிய நாட்டாமை இருக்கிறார். எஜமான் அங்கு உட்கார்ந்து அவர்கள் பேசி தீர்வு செய்யட்டும்.
சின்னம் யாருக்கு ? கொடி யாருக்கு ? கட்சி யாருக்கு ? என முடிவு எடுக்கட்டும்.ஒன்றாக சேர்த்து வேலை செய்ய விரும்பினால், அவர்கள் வேலை செய்யட்டும் அல்லது தனியாக செயல்பட வேண்டுமென்றால் தனியாக செயல்படட்டும்.இப்போது பொது குழுவை இரண்டு பேரும் சேர்ந்து கூட்ட வேண்டும் என்றால், கற்பனை செய்து பாருங்கள் கூடுமா? ஏதோ நடக்கிறது. ஒரு வேகமாக அரசியல் காயமும், போராட்டமும் போகின்ற போது.
படம் வந்து அடிதடியாக நடக்கும்போது சின்னதா ஒரு நகைச்சுவை வரது இல்லையா, அது மாதிரி திடீரென்று குத்துப்பாட்டை போட்டு விடுவோம்,ஊட்டி, கொடைக்கானல் என பாட்டு எடுப்போம். அதுமாதிரி இதையும் பார்த்து இப்படி நடக்குது என்று தெரிந்து கொள்ள வேண்டியது தான் என தெரிவித்தார்.