Categories
அரசியல்

“சொந்த காசில் சூனியம்”… திமுகவில் இணைந்த முக்கிய பிரமுகர்….. அதிர்ச்சியில் அதிமுகவினர்….!!!!

அதிமுகவிலிருந்து வெளியேறிய முன்னாள் கவுன்சிலர் தன் ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்ததால், அதிமுகவினர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி பேரூராட்சியின் தேர்தல் களம் பரபரப்புடன் இருக்கிறது. அங்கு அதிமுகவின் வேட்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டது. அந்த வேட்பாளர் பட்டியலில் 5-வது வார்டு அதிமுக வேட்பாளரான தங்கராஜ் இடம்பெற்றிருக்கிறார். ஆனால், காரணமின்றி அவரை நீக்கியுள்ளனர்.

இதனால், முன்னாள் கவுன்சிலரான அவர், திடீரென்று  தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து திமுகவில் இணைந்து கொண்டார். அதிமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர் திமுகவில் இணைந்து கொண்டதால், ஆண்டிப்பட்டி பேரூராட்சி தேர்தலில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இச்சம்பவம் அதிமுகவினருக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |