Categories
அரசியல் மாநில செய்திகள்

“வெற்றி நடைபோடும் தமிழகம்”- தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் அதிமுக…!!

அதிமுக தேர்தல் பிரச்சாரத்தை வெற்றி நடை போடும் தமிழகம் என்ற தலைப்பின் கீழ் நாளையில் இருந்து தொடங்குகிறது

ஒவ்வொரு கட்சிகளும் சட்டசபை தேர்தலையொட்டி அதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மக்கள் நீதி மையத்தின் தலைவரான கமல்ஹாசனும் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். இதனை அடுத்து ஆளும் கட்சியான அதிமுக-வின் பிரச்சார விழாவை முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், துணை முதல்வரும் நேற்று தொடங்கி வைத்தனர்.
இந்நிலையில் “மக்கள் கிராம சபை” என்ற திட்டம் மூலம் திமுக தலைவரான ஸ்டாலினும் “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” என்ற திட்டம் மூலம் உதயநிதி ஸ்டாலினும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைப் போலவே ஒருவகை தலைப்புடன் பிரச்சாரத்தை தொடங்க வேண்டும் என்று முடிவு செய்த அதிமுக “வெற்றி நடை போடும் தமிழகம்” என்ற தலைப்பின் கீழ் பிரச்சாரத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. இதனையடுத்து தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் நாமக்கல்லில் நாளை பிரச்சாரத்தை தொடங்குகிறார்கள். அப்போது வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பை விளக்கி பிரச்சாரம் மேற்கொள்வார்கள். இத்துடன் ரிப்போர்ட் கார்டு வடிவில் அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் திட்டமிட்டுள்ளனர்

Categories

Tech |