Categories
அரசியல் மாநில செய்திகள்

திசை மாறி போன ADMK… செம வாய்ப்பில் BJP… மேலும் வலிமையாகும் DMK… பிரஸ் மீட்டில் புலம்பல் …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் நிர்வாகி கே.சி பழனிசாமி, இன்று அதிமுகவில் இபிஎஸ் ஓபிஎஸ்ஐ வீழ்த்தினாரா? ஓபிஎஸ் இபிஎஸ் வீழ்த்தினாரா? ரெண்டு பேரும் சேர்ந்து சசிகலாவை வீழ்த்தினார்களா? தினகரன் இபிஎஸ்ஐ, ஓபிஎஸ்ஐ வீழ்த்துவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறாரா? என்கின்ற அளவில் அண்ணா திமுகவினுடைய யுத்தம் திசைமாறி போகிறது. ஒரு அரசியல் கட்சியினுடைய நோக்கம் ஆளுகின்ற கட்சியாக அந்த கட்சி பொறுப்பேற்க வேண்டும்.

தேர்தல்களில் வெல்லுகின்ற கட்சியாக அந்த இயக்கம் வலிமையோடு விளங்க வேண்டும் என்பதுதான். ஆனால் அந்த நோக்கம் சிதறி 2016 டிசம்பரில் அம்மா அவர்கள் மறைந்து, இன்றைக்கு ஆறு ஆண்டுகள் ஆனாலும் கூட, அண்ணா திமுகவில் இன்னும் அந்த உட்கட்சி யுத்தம், யார் யாரை வீழ்த்துகிறார்கள் ? அந்த தலைமை பொறுப்புக்கு தான் அந்த போட்டி நடக்கிறது. இந்த ஒன்றுபட்ட அண்ணா திமுகவில் இபிஎஸ் – ஓபிஎஸ் ஓரளவு ஒருங்கிணைந்து…

தினகரனைத் தவிர மற்றவர்கள் ஒருங்கிணைந்து இருந்தபோது திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்புக்கு வந்துவிட்டது. அப்படி இருக்கின்ற காலத்தில் அதற்குப் பிறகு மேலும் அண்ணா திமுக பலவீனம் அடைகின்ற வகையில் மேற்கொண்ட பிளவுகள் என்பது அண்ணா திமுகவை மேலும் மேலும் பலகீனப்படுத்தும், அது மத்தியில் ஆளுகின்ற பாரதிய ஜனதா கட்சி, தமிழகத்தில் தேசிய சக்திகள், மதவாத சக்திகள் கால்ஊன்றுவதற்கு மட்டும்தான் அது உதவிகரமாக இருக்கும். அதே போல திமுகவை வலிமை பெற செய்வதாக தான் அது அமையும் என தெரிவித்தார்.

Categories

Tech |