Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK 1ரூபாய் 30 பைசா கூட்டிச்சு… நாங்க வெறும் 70பைசா தான்…. கட்டண உயர்வுக்கு அமைச்சர் பதில்..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, சிறுகுறு தொழில் செய்கிறவர்கள் கொடிசியாவில் இருந்து வந்து எல்லாரும் என்னை சந்தித்து மனுவை கொடுத்தார்கள்.. அவர்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஒழுங்குமுறை ஆணையம் கருத்து கேட்பு கூட்டம் நடத்துகிறார்கள். அந்த கருத்துக்கு ஏற்ப கூட்டத்தில் அவர்களின் கருத்துக்களை பதிவு செய்யலாம். நிச்சயமாக அவர்களுக்கு என்னென்ன வேண்டுமா அவர்களின் கருத்துக்களை பதிவு செய்யலாம். நிச்சயமாக அவர்கள்  கொடுத்த மனுக்களையும் பரிசீலனை  செய்கிறேன் என்று கூறுகிறேன்.

இது கொள்கை ரீதியான முடிவுகள். ஒவ்வொரு தொழிற்சாலையும், ஒவ்வொரு நிறுவனமும் அவர்களுக்கான சலுகைகளை கேட்பது என்பது கொள்கை ரீதியான முடிவு. அது தொழில் துறை, நிதி நிர்வாகம், இவர்களெல்லாம் சேர்ந்து எடுக்கக்கூடிய முடிவு. நாம் மின்சார துறை சம்பந்தமான பதில்கள்தான் கூறுகிறோம். இது எல்லாமே கூட்டு  முயற்சி தான். நிதி துறையாக இருக்கட்டும், தொழில்துறையாக இருக்கட்டும் அதையெல்லாம் சேர்ந்து எடுக்கக்கூடிய முடிவுதான்.

கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு ரூபாய் இருந்த விசைத்தறி நெசவாளர்களுக்கு 2 ரூபாய் 30 பைசா உயர்த்தினார்கள். இப்போது நாங்கள் வெறும் 70 பைசா தான் உயர்த்தப்பட்டிருக்கிறது, இரண்டையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். 1ரூபாய் 30 பைசா உயர்த்தினது,  இப்போது 70 பைசா தான் உயர்த்தப்பட்டிருக்கிறது. இருந்தாலும் அவருடைய கருத்துக்கள் சொலி  இருக்கிறார்கள். அவர்களை தேவைகளை கருத்துகளாக சொல்லியிருக்கிறார்கள், சிலது எல்லாம் சீர்தூக்கி பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

Categories

Tech |