பிரதமரின் விவசாயி ஊக்கத்தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்க தடை என தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் பிரதமரின் விவசாயிகள் ஊக்கத் தொகை திட்டத்தில் ரூ.110 கோடி மோசடி நடைபெற்றுள்ளது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் போலியான நபர்களை திட்டத்தில் சேர்த்து மோசடி நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டதால் புதிய பயனாளிகள் சேர்க்கை நிறுத்தம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதன்காரணமாக, பிரதமரின் விவசாயிகள் ஊக்கத் தொகை திட்டத்தில் பயனாளிகள் சேர்க்கை பணியை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசால் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. போலி நபர்களின் செயாலால் இந்த சேவையானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.