விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட ராகவன் பேட்டை பகுதிகளில் எந்த ஒரு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட 41-வது வார்டு ராகவன் பேட்டை பகுதியில் கடந்த 25 வருடங்களுக்கு முன்பாக பஞ்சாயத்து சார்பாக ஏற்படுத்தப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி தான் இன்னும் பயன்பாட்டில் இருக்கிறது என்றும் நகராட்சி ஆக மாற்றப்பட்டு 10 ஆண்டுகளாகியும் குடிநீருக்காக மாற்று ஏற்பாட்டிற்கு எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் 100 குடியிருப்புகள் இருந்த பகுதி தற்போது மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளாக வளர்ச்சி பெற்றிருக்கும் நிலையில் நகராட்சி குடிதண்ணீருக்கு மிகவும் சிரமப்படுவதாக பொது மக்கள் தெரிவிக்கிறார்கள். இலவச பொது கழிப்பிடம் கட்டப்பட்டு அதுவும் மக்கள் பயன்பாட்டில் இல்லாமல் செலவு கணக்கில் மட்டுமே இருப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள்.
பல தெருக்களில் இன்னும் மின்விளக்கு கூட ஏற்படுத்தப்படவில்லை. பலமுறை இதுகுறித்து நகராட்சி அலுவலரிடம் புகார் அளித்தும் நகரமாகவே இருப்பதாக கூறும் அப்பகுதி மக்கள் நகராட்சி ஆணையர் உடனே தலையிட்டு இந்த பிரச்சனை தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.