2021 -ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் 50 முறை டக்அவுட்டாகி மோசமான சாதனை படைத்துள்ளனர்.
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதற்கு முன் நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் பாக்ஸிங் டே டெஸ்டில் இன்று 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் தொடங்கியது .இந்த 3-வது டெஸ்டிலும் தோல்வி அடைந்தால் இங்கிலாந்து அணி தொடரை இழக்க நேரிடும் என்பதால் 4 மாற்றங்களுடன் களமிறங்கியது .ஆனால் பலன் அளிக்கவில்லை.
இதில் தொடக்க வீரராக களமிறங்கிய ஹசீப் ஹமீத் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதையடுத்து மற்றொரு தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி 12 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார் .குறிப்பாக தொடக்க வீரர் ஹசீப் ஹமீத் டக் அவுட் ஆகி வெளியேறியது இங்கிலாந்துக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்தது. அதோடு 2021 -ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் 50-வது டக் அவுட் இதுவாகும் . இதன் மூலம் இங்கிலாந்து அணி மோசமான சாதனையை படைத்துள்ளது.