Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி மது குடித்தல்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது….!!

மது குடித்துவிட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர்  கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டம் திருவள்ளுவர் நகர் பகுதியில் தமிழரசன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகின்றார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் தமிழரசன் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் தாயார் நன்னிலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் துர்கா தமிழரசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |