தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது டிஎஸ்பி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் மாமனிதன் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சீனு ராமசாமி இயக்க, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். அதன் பிறகு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா முதன்முறையாக சேர்ந்து இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்கள்.
இந்த படம் ரிலீஸ் ஆகி வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மாமனிதன் திரைப்படம் சர்வதேச திரைப்படம் விழாக்களில் 40 விருதுகளை பெற்றுள்ளது. அதோட ஐஎம்டிபி நடத்தும் 3 விழாக்களுக்கு மாமனிதன் படம் தேர்வு செய்யப் பட்டுள்ளது. மேலும் இந்த தகவலை விஜய் சேதுபதி தன்னுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
#Maamanithan has acquired 40 awards at International Film Festivals & shortlisted for 3 festivals on @IMDb@seenuramasamy @SGayathrie @YSRfilms @thisisysr @studio9_suresh @onlynikil @CtcMediaboy pic.twitter.com/C1A7boid36
— VijaySethupathi (@VijaySethuOffl) December 1, 2022