சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக மதுரையில் மிக வேகமாக வளர்ச்சி காணும் நகரமாக திகழ்கிறது. இந்நிலையில் மதுரை மக்களவைத் தொகுதி சிபிஎம் கட்சி எம்பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டரில் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதில் “மதுரையின் அடுத்த கட்ட வளர்ச்சி திட்டங்களான டைட்டில் பார்க், புதிய தொழில்நுட்ப பூங்கா, வண்டியூர் கண்மாய் பூரண அமைப்பு திட்டம், கோடாம்பட்டியில் புதிய பேருந்து நிலையம் மற்றும் மதுரை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து தமிழக முதல்வர், செயலர்கள் மற்றும் அரசு துணை செயலாளர் நேற்று தலைமை செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடைபெற்றது. அப்போது திட்ட பணிகள் நிறைவேற்றப்படுவதை விரிவுபடுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மேற்குறிப்பிட்ட திட்டங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மதுரையில் தொழில் வளர்ச்சி காணும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி மதுரையில் மாநகராட்சி மற்றும் டைட்டல் ஆகியவை இணைந்து “டைடல் பார்க்” ஒன்றை அமைக்க உள்ளதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டது. இது மாட்டுத்தாவணி பகுதியில் இரண்டு கட்டங்களாக அமைக்கப்படும். முதல் கட்ட ரூ.600 கோடி மதிப்பில் ஐந்து ஏக்கரில் தொடங்கப்படும். இரண்டாவது கட்டமாக மேலும் 5 ஏக்கரில் இரட்டிப்பாகப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மதுரை மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு செல்லும். 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைப் போல வண்டியூர் கண்மாயை மெரினா போல மாற்றம் வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த கண்மாய் சீரமைத்து செயற்கை தீவு, படகு பயணம், பூங்காவில் சிறுவர் ரயில், பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவற்றை உருவாக்கி சிறந்த சுற்றுலா தளமாக மாற்ற அரசு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போது கண்மாய் கரையில் அமைந்துள்ள பூங்கா புதுப்பொலிவுடன் காட்சியளித்து வருகிறது. அதனை தொடர்ந்து தினந்தோறும் நடைப்பயிற்சி, சிலம்பம், சிறுமிகளின் ஸ்கேட்டிங், சிலம்ப பயிற்சிகள், தள்ளுவண்டி கடைகள், இயற்கை பானங்கள் விற்பனை என பரபரப்பாக காட்சி அளிக்கிறது. இதனை புதுப்பொலிவு பெற செய்தால் வேற லெவலுக்கு புகழ்பெற்று விடும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து கொடாம்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள பேருந்து நிலையம் கடந்த 10 ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இன்றி உள்ளது. இதனால் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட எல்லைக்குள் சந்திக்கும் பகுதியாக கொடாம்பட்டி இருப்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் தினசரி வந்து செல்கிறது. இதற்கு புதிய இட வசதியுடன் கூடிய பேருந்து நிலையம் இருந்தால் பெரிது உதவிகரமாக இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அனைத்து திட்டங்களும் மதுரையில் செயல்படுத்தப்பட்டால் வேற லெவலுக்கு மாறிவிடும் என்று கூறி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.