தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீஸ் ஆனாலும், குறிப்பிட்ட சில படங்கள் மட்டும் தான் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது. குறிப்பாக விஜய் மற்றும் அஜித் திரைப்படங்கள் என்றாலே ரிலீசுக்கு முன்பே ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கி விடுவார்கள். வசூல் சக்கரவர்த்தியான விஜய் படங்கள் மற்றும் அஜித் படங்கள் வசூலில் வேற லெவல் சாதனை படைக்கும். ஆனால் தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகமாகி முன்னணி கதாநாயகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் அஜித் மற்றும் விஜய்யை ஓவர் டேக் செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் தான் அதிக வசூல் புரிந்துள்ளதாம். அதாவது வசூல் ரீதியாக விக்ரம் திரைப்படம் முதல் இடத்திலும், 2-ம் இடத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படமும், 3-ம் இடத்தில் டான் திரைப்படமும் இருக்கிறது. இந்த படங்களுக்கு பிறகு தான் விஜய் மற்றும் அஜித்தின் திரைப்படங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தகவலை நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் வலைதளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
Categories
அடேங்கப்பா!… இது அசுர வளர்ச்சி பா….. விஜய், அஜித்தை வசூலில் ஓவர் டேக் செய்த “நடிகர் SK”?…… எந்த ஏரியால தெரியுமா…..?
