‘தளபதி 65’ படத்தில் நடிக்க உள்ள நடிகையின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதைத் தொடர்ந்து விஜய்யின் 65-வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது .
இவர் ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் . தற்போது பூஜா ஹெக்டே ஹிந்தி திரையுலகில் பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார் . மேலும் இவர் நடிகர் பிரபாஸுடன் இணைந்து நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது . இந்நிலையில் தளபதி 65 படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ள பூஜா ஹெக்டேவுக்கு ரூ3.5 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது .