தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம், குஷ்பூ, சம்யுக்தா, சங்கீதா, மீனா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
இந்த படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே கடந்த மாதம் 5-ம் தேதி வெளியான நிலையில் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வருகிறது. தமன் இசையில் உருவான ரஞ்சிதமே பாடலை நடிகர் விஜய் மற்றும் மானசி இணைந்து பாடியிருந்தனர். இந்நிலையில் ரஞ்சிதமே பாடல் தற்போது யூடியூபில் 7 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் இந்த தகவலை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் டுவிட்ரில் அறிவித்துள்ளது.
#Ranjithame hits 75M+ views now!!
THE BOSS strikes in style 🔥📽️ https://t.co/Q56reRvcvc
🎵 https://t.co/gYr0tlcMmD#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Lyricist_Vivek @manasimm @AlwaysJani @TSeries #Varisu #VarisuPongal#RanjithameHits75M pic.twitter.com/TRfWYmG2uE— Sri Venkateswara Creations (@SVC_official) November 30, 2022