Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! படம் சூப்பரா இருக்கு…. இதுதாங்க சிறந்த படைப்பு….. சர்தார் படத்தை புகழ்ந்து தள்ளிய சீமான்…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் கார்த்தி நடிப்பில் அண்மையில் விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்குப் பிறகு நடிகர் கார்த்தி பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ராசி கண்ணா, லைலா, மாஸ்டர் ரித்விக், சங்கி பாண்டே ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த  21-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி  பாசிட்டிவ்வான விமர்சனங்களை குவித்து வருவதோடு பாக்ஸ் ஆபீஸிலும் வசூல் மழை பொழிகிறது. இந்நிலையில் நடிகர் சீமான் சர்தார் படம் குறித்து தற்போது பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, இது ஒரு படம் என்று சொல்ல முடியாது. இது ஒரு படிப்பினை. இந்த கருத்தை நான் பலமுறை வலியுறுத்தி பேசி இருக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் தண்ணீர் என்பது மிகப்பெரிய வியாபார பொருளாக மாறி உள்ளது. உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உடமை பொருளாக திகழும் ஒரு பொருள் வியாபார நோக்கத்தில் மா=றியதிலிருந்து நாம் எவ்வளவு பெரிய ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்பது தெரிகிறது. இயக்குனர் மித்ரன் ஒரு தரமான படைப்பை உருவாக்கி இருக்கிறார். அவரிடம் ஒரு சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய பார்வை இருக்கிறது. மேலும் சர்தார் ஒரு சிறந்த படைப்பு என்று கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Categories

Tech |