விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, அசல், செரினா, விஜே மகேஸ்வரி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். அதன்பிறகு இந்த வாரத்தில் அசீமை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என போட்டியாளர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்தார்கள்.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக நிவாஷினி எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நிவாஸஷினி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், நேராக அசல் வீட்டுக்கு தான் செல்வார்கள் என்று நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் கலாய்த்து வருகிறார்கள். அதாவது அசல் வீட்டுக்குள் இருந்தவரை மகிழ்ச்சியாக இருந்த நிவா அவர் சென்ற பிறகு இருந்த இடமே தெரியாமல் இருந்தார்.
இதனால்தான் நிவா அசல் வீட்டுக்கு செல்வார் என்று பலரும் கூறுகிறார்கள். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் நிவாஷினி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஒரு நாளைக்கு 12 முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமாக வாங்கி இருக்கிறார். மேலும் இந்த தகவலை கேள்விப்பட்ட நெட்டிசன்கள் பலரும் இருந்த இடம் தெரியாமல் இருந்த வெளிநாட்டு மாமிக்கு இவ்வளவு சம்பளமா என்று கூறி வருகிறார்கள்.